/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி பற்றாக்குறை
/
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி பற்றாக்குறை
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி பற்றாக்குறை
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி பற்றாக்குறை
ADDED : ஆக 20, 2025 10:46 PM
திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு நிதி பற்றாக்குறை காரணம் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1984ல் துவக்கப்பட்டது. 110 ஏக்கரில் அமைந்த ஆலை வளாகத்தை சுற்றி, அதே ஆண்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
பின், சில ஆண்டுகளில் சுற்றுச்சுவர் ஆங்காங்கே உடைந்ததுடன், சமூக விரோதிகளால் சில இடங்கள் உடைக்கப்பட்டன. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் மது அருந்துவதும், ஆலை குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்தது. மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக சர்க்கரை ஆலை வளாகம் மாறியது.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, ஆலை வளாகத்தில் சுற்றுச்சுவர் இன்றி உள்ள 1,700 மீட்டருக்கு, 20 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக, சர்க்கரை துறை ஆணையருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.
அதன்படி, 2024 - ---25ல் ஆலை பராமரிப்பு நிதியில் இருந்து, 4.74 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த மாதம் 360 மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. மீதமுள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைக்காமல் கைவிடப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வெளிநபர்கள் ஆலை வளாகத்தை ஆக்கிரமிப்பதை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. 1,340 மீட்டருக்கு சுற்றுச்சுவர் பணி நிதியின்றி நிறுத்தப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கக்கோரி ஆணையருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்த பின் பணி துவங்கும். - கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி, திருத்தணி.