/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை
/
அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை
ADDED : ஆக 01, 2025 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ஆடி வெள்ளியையொட்டி, அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும் பெண்கள் வழிபட்டனர்.
திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள வாசுவி அம்மன் கோவிலில் நேற்று, ஆடி வெள்ளியையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் நடந்த விளக்கு பூஜையில், திரளான பெண்கள் பங்கேற்றனர்.
அதேபோல், திருத்தணி படவேட்டம்மன் கோவில், தணிகாசலம்மன் கோவில், தணிகை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில்களில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழி பட்டனர்.

