/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : டிச 05, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் குரு முக்தீஸ்வரர் கோவிலில், அய்யப்பனுக்கு 18ம் படி திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில், பொம்மி அம்பாள் உடனுறை, குரு முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில், தர்ம சாஸ்தா ஆலயத்தில், 18ம் படி திருவிளக்கு பூஜை கடந்த 2ம் தேதி, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. -
நேற்று முன்தினம், ராஜலிங்கத்திற்கு அண்ணாமலையார் மஹா தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் அய்யப்பனுக்கு அன்னாபிஷேகம், தொடர்ந்து 18ம் படி திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை அய்யப்பனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

