/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்பு
/
ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்பு
ADDED : டிச 19, 2024 12:30 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே, தாசில்தார் அலுவலக சாலையோரம், சர்வே எண்: 209ல், 42 செண்ட் பரப்பளவு கொண்ட மந்தவெளி புறம்போக்கு நிலம் உள்ளது.
அதில், நான்கு செண்ட் இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வீடு ஒன்றை நிறுவி, முன்புறம், பின்புறமும் தோட்டம் வைத்திருந்தார். ஆக்கிரமிப்பு நிலத்தின் சந்தை மதிப்பு, 1.20 கோடி ரூபாயாகும்.
அதன் அருகே உள்ள பட்டா நில உரிமையாளர், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தீர்ப்பின் படி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி தலைமையிலான வருவாய் துறையினர், போலீசார், மின் வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், ஜே.சி.பி.,யுடன் ஆக்கிரமிப்புகளை மீட்க சென்றனர்.
ஆக்கிரமித்தவர் மாற்றுத்திறனாளி என்பதால், உடனடியாக வீட்டை காலி செய்ய இயலாது, ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்ற தாசில்தார், வீட்டை தவிர ஆக்கிரமிப்பில் இருந்த, 2.5 செண்ட் தோட்டம், அதன் தடுப்புகளை ஜே.சி.பி., வாயிலாக அகற்றினர்.
ஒரு மாத காலத்திற்குள் தாமாக முன் வந்து வீட்டை காலி செய்யாவிட்டால், வீடு இடிக்கப்படும் என, தாசில்தார் தெரிவித்து சென்றார்.