sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் ஆக்கிரமிப்பு

/

கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் ஆக்கிரமிப்பு

கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் ஆக்கிரமிப்பு

கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் ஆக்கிரமிப்பு


ADDED : ஜன 27, 2025 11:38 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை பாரிமுனையில் உள்ள கந்தக்கோட்டம் கந்தசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, நுாறு ஆண்டுகளுக்கு முன் பல தரப்பினரும் தங்க, வைர நகைகள், கட்டடங்கள், நிலம் ஆகியவற்றை, கோவிலுக்கு தானமாகவும், காணிக்கையாகவும் வழங்கியுள்ளனர்.

அந்த வகையில், கந்தசாமி கோவிலுக்கு, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முறையாக பராமரிக்காமலும், பத்திரப்பதிவு செய்யாமலும் விட்டதால், பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிஉள்ளன.

கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பாரதிதாசன் தெரு, கதவு எண் 7ல், கோவிலுக்கு சொந்தமான, 8,000 சதுரடி நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு, அங்கு கட்டடம் கட்டும் பணி நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

சென்னை, எருக்கஞ்சேரியில் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான, 8,000 சதுர அடி நிலம் உள்ளது. அந்த இடத்தை ஆக்கிரமித்து, அதே பகுதியைச் சேர்ந்த, கிறிஸ்துவ மதபோதகர் ஒருவர் புதிதாக கட்டடம் கட்டி வருகிறார்.

இவர், சிறிது சிறிதாக, 8,000 சதுரடி நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளார். தற்போதைய நிலத்தின் சந்தை மதிப்பு, 12 கோடி ரூபாய்.

இதுகுறித்து, புகார் அளித்தும் அரசும், கோவில் நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே இவர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இந்த இடத்தின் அருகே, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,200 சதுரடி நிலத்துடன் கூடிய கட்டடத்தை ஆக்கிரமித்துஉள்ளார்.

மேலும், கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, புதிதாக கட்டுமானப் பணியை செய்து வருகிறார். ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கோவில் நிலம் மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பணி நிறுத்தம்


இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை:

கொடுங்கையூர், எருக்கஞ்சேரியில், கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் உள்ள, 23 மனை குடியிருப்புகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், கொடுங்கையூர், பாரதிதான் தெரு, எண் 8/7ல் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதை, ஏ.ஐ.பி.ராஜ் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் கோவில் அனுமதியில்லாமலும், மாநகராட்சி அனுமதியில்லாமலும், பழைய கட்டடத்தை இடித்து, புதிதாக கான்கிரீட் கட்டடம் கட்டவதாக புகார் வந்தது.

நேரில் ஆய்வு செய்தோம். கட்டுமானப் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுமான பணியை தொடர மாட்டோம் என, அவர்கள் கடிதம் எழுதி தந்துள்ளனர்.

அனுமதியின்றி நடக்கும் கட்டுமானத்தை தடை செய்யக்கோரி, சென்னை மாநகராட்சிக்கு புகார் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us