/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நில உரிமையாளர் கட்டட பணி புறவழிச்சாலை பணியில் சிக்கல்
/
நில உரிமையாளர் கட்டட பணி புறவழிச்சாலை பணியில் சிக்கல்
நில உரிமையாளர் கட்டட பணி புறவழிச்சாலை பணியில் சிக்கல்
நில உரிமையாளர் கட்டட பணி புறவழிச்சாலை பணியில் சிக்கல்
ADDED : ஜூலை 20, 2025 12:52 AM

பொதட்டூர்பேட்டை:தனிநபருக்கு சொந்தமான இடத்தின் வழியாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில், இடத்தின் உரிமையாளர் கட்டுமான பணிகளை துவக்கியுள்ளதால், புறவழிச்சாலை புனரமைப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொதட்டூர்பேட்டை, வாணிவிலாசபுரம் கூட்டுச்சாலையில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
இந்நிலையில், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த முருகேசன் என்பவர், ''எனக்கு சொந்தமான புலம் எண்: 29 என்ற இடத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டு தொகை தற்போது வரை வழங்கவில்லை.
“இந்த இடத்தில் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும்,” என, வருவாய் துறையிடம் ஏற்கனவே மனு அளித்திருந்தார். நேற்று, அந்த இடத்தில் முருகேசன், கட்டுமான பணிகளையும் துவங்கியுள்ளார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், “மாற்று வழியில் சாலை அமைப்பதா அல்லது சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் பேசி சுமுக தீர்வு காண்பதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,” என்றார்.