ADDED : அக் 16, 2024 12:21 AM

பொன்னேரி:கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் ரயில் மாரக்கத்தில், பொன்னேரி அடுத்த திருவாயற்பாடி அருகே நேற்று மாலை, அங்குள்ள தண்டவாள பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறு பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே பராமரிப்பு பிரிவினர் அங்கு விரைந்தனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் மார்க்கத்தில் போக்குவரத்தும் பாதித்தது. ரயில்கள் கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஊழியர்கள் மண் சரிவுகளை சீரமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் சரளை கற்கள் மூட்டைகளில் கட்டி போட்டு மண் சரிவு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ரயில்கள் இயக்கப்பட்டன. பாதிப்பு ஏற்பட்ட பகுதியை கடக்கும்போது ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால், கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் 30 - 40 நிமிடங்கள் தாமத்துடன் பயணித்தன.