/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க 31ல் கடைசி
/
தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க 31ல் கடைசி
ADDED : அக் 25, 2024 08:50 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை உரிமம் வரும் 31க்குள் புதுப்பிக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2025ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை இணையதளம் வாயிலாக புதுப்பிக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, மற்றும் சென்னை மாவட்டம், மதுரவாயல் ஆகிய தாலுகாக்களில் உள்ள பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை, வரும் 31க்குள் புதுப்பிக்க வேண்டும்.
இதற்கான கட்டணத்தை www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
அதன்படி, படிவம் -2 சமர்ப்பிக்கப்பட்டவுடன் புதுப்பிக்கப்பட்ட தொழிற்சாலை உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க, 'இணையதளம்' வாயிலாக தொழிற்சாலை உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.