ADDED : நவ 22, 2024 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி நீதிமன்ற அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நா. மாரப்பன் பங்கேற்று, வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.