/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு நிலத்தை மீட்க கோரி எஸ்.பி.,யிடம் வக்கீல்கள் மனு
/
அரசு நிலத்தை மீட்க கோரி எஸ்.பி.,யிடம் வக்கீல்கள் மனு
அரசு நிலத்தை மீட்க கோரி எஸ்.பி.,யிடம் வக்கீல்கள் மனு
அரசு நிலத்தை மீட்க கோரி எஸ்.பி.,யிடம் வக்கீல்கள் மனு
ADDED : ஏப் 23, 2025 02:40 AM
திருவள்ளூர்,திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் ஊராட்சியில், சர்வே எண் 97/5ல், 22 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.  இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, போலி பட்டா, அரசு முத்திரை மற்றும் அதிகாரிகளின் கையொப்பங்களை இட்டு, நிலத்தை விற்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று, சிறுவானூர் கண்டிகை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற எஸ்.பி., 'மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.