/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எல்.டி.மர்பி கால்பந்து போட்டி லயோலா ஒயிட்ஸ் 'சாம்பியன்'
/
எல்.டி.மர்பி கால்பந்து போட்டி லயோலா ஒயிட்ஸ் 'சாம்பியன்'
எல்.டி.மர்பி கால்பந்து போட்டி லயோலா ஒயிட்ஸ் 'சாம்பியன்'
எல்.டி.மர்பி கால்பந்து போட்டி லயோலா ஒயிட்ஸ் 'சாம்பியன்'
ADDED : மார் 14, 2024 10:15 PM

சென்னை:'மர்பி' நினைவு கால்பந்து போட்டியில், லயோலா ஒயிட்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
லயோலா கல்லுாரி சார்பில், கல்லுாரியின் மறைந்த முன்னாள் முதல்வரான எல்.டி.மர்பி நினைவு கோப்பைக்கான கால்பந்து போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரியின் மைதானத்தில் நடந்தது.
சென்னை லயோலா, எம்.சி.சி., மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப், நடப்பு சாம்பியன் வேல்ஸ் பல்கலை உட்பட, மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.
போட்டிகள் அனைத்தும்,'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடந்தன.கடைசி 'லீக்' போட்டியில், லயோலா ஒயிட்ஸ் அணி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் அணிகள் மோதின. அதில், 2 - 0 என்ற கோல் கணக்கில், லயோலா ஒயிட்ஸ் அணி வெற்றி பெற்றது. அணியின் வீரர்கள் சுபாஷ் மற்றும் தேவ்தத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
அனைத்து சுற்றுகளின் முடிவில், லயோலா ஒயிட்ஸ் அணி முதலிடத்தையும், திருச்சி செயின்ட் ஜோசப் இரண்டாம் இடத்தையும், லயோலா எல்லோ மற்றும் திருவள்ளூர் கிரிஸ்ட் அணிகள் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன.

