/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் மறுப்பு
/
சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் மறுப்பு
ADDED : ஜூலை 20, 2025 10:45 PM
திருத்தணி:திருத்தணி அருகே வயல்வெளியில் சிறுத்தை சென்றதாக சிலர் கூறியதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இதை, வனத்துறையினர் மறுத்துள்ளனர்.
திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம், கீழ்எட்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில், இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், சிறுத்தையை சிலர் பார்த்தாகவும் கூறுகின்றனர். மேலும், தரணிவராகபுரத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், சிறுத்தையின் கால்தடம் இருப்பதாகவும் கூறினர். தகவல் அறிந்து வந்த திருத்தணி வனத்துறையினர், நேற்று விவசாய நிலத்தில் பதிந்திருந்த கால் தடத்தை ஆய்வு செய்தும், மொபைல் போனில் படம் பிடித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பினர்.
இதுகுறித்து, திருத்தணி வனத்துறை அதிகாரி கூறியதாவது:
தரணிவராகபுரம், கீழ்எட்டிக்குப்பம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இல்லை. சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே இருக்கும். குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலத்திற்கு வருவது அரிது. விவசாய நிலத்தில் எடுக்கப்பட்டது புனுகு பூனையின் கால் தடம். சிறுத்தை போல் உருவம், கால் தடம் கொண்டது புனுகு பூனை. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.