ADDED : மார் 21, 2024 12:11 AM
அ நிறம் | அளவு
திருத்தணி:திருத்தணி நகராட்சி, தீபாத்தியம்மன் கோவில் தெருவில், மின்விளக்குகள் முறையாக பராமரிக்காததால் எரியாமல் இருந்தன. மேலும், சில மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தன. இதனால், பயணியர் மற்றும் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகம், 20க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைத்தது.
மேலும், பழுதடைந்த மின்விளக்குகளும் சீரமைத்தது. தற்போது மின்விளக்குகள் ஒளிர்வதால், அப்பகுதியினர் மற்றும் ரயில் பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
