/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டு கோர்ட் அருகே மின்விளக்கு அமைப்பு
/
பள்ளிப்பட்டு கோர்ட் அருகே மின்விளக்கு அமைப்பு
ADDED : அக் 20, 2024 12:47 AM

பள்ளிப்பட்டு:பள்ளிபட்டு நகரில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில், சோளிங்கர் கூட்டு சாலை அருகே, பள்ளிப்பட்டு கோர்ட் அமைந்துள்ளது. இதே பகுதியில், தீயணைப்பு நிலையம், வன சரக அலுவலகம், வட்டார வேளாண் மையம், உணவு பாதுகாப்பு கிடங்கு என பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த இடம் மாறிவருகிறது. இதனால், எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில், சோளிங்கர் கூட்டு சாலையில் உள்ள முச்சந்தியில் கடந்த மாதம் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதானல் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்ததில் இங்கு அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிழற்குடை அமைக்கவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.