ADDED : நவ 29, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை: கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக, மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த, கார்த்தி, 38, என்பவரை, இன்று (நவ.,29) போலீசார் கைது செய்தனர்.
ஆர்.கே.பேட்டை மதுக்கடை அருகே, தனி நபர் ஒருவர், அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த போலீசார், நாராயணபுரம் கூட்டு சாலை அருகே, கையில் பையுடன் சென்ற ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில், அம்மையார்குப்பம் காலனியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் கார்த்தி என்பதும், அவர் வைத்திருந்த பையில், 25 மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
