/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் ரூ.21 கோடி மது விற்பனை
/
திருவள்ளூரில் ரூ.21 கோடி மது விற்பனை
ADDED : நவ 04, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 184 மதுபான கடைகளில் மது விற்பனை 20 கோடியே 92 லட்சத்து 28 ஆயிரத்து 745 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
தீபாவளிக்கு முன்தினம் 30 ம் தேதி 10,404 மது வகைகளும் 4,905 பீர் வகைகளும் 9 கோடியே 62 லட்சத்து 83 ஆயிரத்து 410 ரூபாயக்கு விற்பனையாகியுள்ளது.
தீபாவளி அன்று 31 ம் தேதி 11,493 மது வகைகளும் 8,034 பீர் வகை என, 11 கோடியை 29 லட்சத்து 45 ஆயிரத்து 335 ரூபாய் விற்பனையாகியுள்ளது.
இரண்டு நாட்களும் 20 கோடியே 92 லட்சத்து 28 ஆயிரத்து 745 ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆனது, என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.