நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில், டாஸ்மாக் கடை இயங்காத காலை நேரத்தில், டூ-- வீலரில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, டூ-- வீலர் இருக்கைக்கு கீழ் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த, எளாவூர் பதியை சேர்ந்த மோகன், 35, என்பவரை கைது செய்தனர். 28 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.