/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
/
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
ADDED : டிச 09, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: ஆந்திர மாநில மதுபாட்டில்கள் திருத்தணி வழியாக அரக்கோணம், திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்கு கடத்தி செல்வதாக எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் நேற்று கனகம்மாசத்திரம் கூட்டு சாலையில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக, முதியவர் ஒருவர் தலையில் பை சுமந்து நடந்து வந்துக் கொண்டிருந்தார்.
போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்ததில் பையில், 50 ஆந்திரா மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருவள்ளூர் அடுத்த வரதாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், 65, என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

