ADDED : பிப் 23, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணிக்கு சாராயம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி மதுவிலக்கு போலீசார் நேற்று, பள்ளிப்பட்டு, குமாரமங்கலம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்தவரை, போலீசார் சோதனை செய்தனர். வாகனத்தில், அரை லிட்டர் 22 பாக்கெட் சாராயம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பின், சித்துார் மாவட்டம், நகரியைச் சேர்ந்த முனுசாமி, 45, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
