/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வறண்டு கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி
/
வறண்டு கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி
ADDED : பிப் 15, 2024 11:42 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட இறையாமங்கலம் ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அருகே, கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ், 20,000 ரூபாய் மதிப்பில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டியில், எப்போதும் தண்ணீர் நிரம்பி இருப்பதற்கான பராமரிப்பு பணியை ஊராட்சி நிர்வாகம் முறையாக செயல்படுத்த வேண்டும் என, கால்நடை விவசாயிகள் மற்றும் அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், இந்த கால்நடை குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இல்லாததால், தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால், தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகள் ஏமாற்றம் அடைகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கால்நடை குடிநீர் தொட்டியை பராமரித்து, எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.