/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு ஆலையில் சோதனை
/
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு ஆலையில் சோதனை
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு ஆலையில் சோதனை
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு ஆலையில் சோதனை
ADDED : ஜூலை 14, 2025 11:40 PM
பொன்னேரி, கோவில் நிகழ்ச்சிக்காக வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக, சுத்திகரிப்பு ஆலையில் அதிகாரி ஆய்வு செய்தார்.
பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில், நேற்று முன்தினம் நடந்த கோவில் விழாவிற்கு வாங்கிய தண்ணீர் பாட்டில் ஒன்றில், பல்லி இறந்து கிடந்தது.
இதுகுறித்து பொன்னேரியில் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலையில், கிராம மக்கள் சென்று கேட்டபோது, அங்கிருந்தவர்கள் அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். நேற்று மீஞ்சூர் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகர், தனியார் சுத்திகரிப்பு ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.
தண்ணீர் சுத்திகரிக்க பின்பற்றப்படும் வழிமுறைகள், பாட்டில்களின் தரம், சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்விற்கு பின், தண்ணீரின் தரம் குறித்து பரிசோதனை மேற்கொள்ள, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை கொண்டு சென்றார்.'ஆய்வுக்கு பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.