/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண் கடத்தி வந்த லாரிகள் பறிமுதல்
/
மண் கடத்தி வந்த லாரிகள் பறிமுதல்
ADDED : மே 24, 2025 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மண் கடத்தப்படுவதாக, திருத்தணி கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விடியங்காடு அடுத்த பொன்னை அருகே, கோட்டாட்சியர் கனிமொழி தலைமையிலான வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக உரிய ஆவணங்களின்றி மண் கடத்தி வந்த இரண்டு லாரிகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து, ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.