ADDED : ஜன 24, 2025 07:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று முன்தினம் கனிமவளத் துறை துணை தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, திருத்தணி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நோக்கி வந்த, 'டாடா டாரஸ்' லாரியை நிறுத்த முயன்றனர். இதில், லாரி ஓட்டுனர் அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடினர்.
இதையடுத்து, துணை தாசில்தார் மற்றும் போலீசார் லாரியில் சோதனை மேற்கொண்டபோது அனுமதியின்றி 4 யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதுகுறித்து, துணை தாசில்தார் சண்முகசுந்தரம், திருவள்ளூர் நகர போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செயது விசாரிக்கின்றனர்.

