/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வலிப்பு நோயால் லாரி ஓட்டுநர் பலி
/
வலிப்பு நோயால் லாரி ஓட்டுநர் பலி
ADDED : ஜூன் 09, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,
கர்நாடக மாநிலம், பெங்களூரூ, அப்பகோடி பகுதியைச் சேர்ந்தவர் வாசு, 43. லாரி ஓட்டுநர். நேற்று முன்தினம் இவர் மதுரவாயலில் இருந்து பனப்பாக்கம் கிராமத்திற்கு டயர் லோடு ஏற்றி சென்றார்.
இரவு திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார். பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.