/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை கடக்க முயன்ற லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
/
சாலையை கடக்க முயன்ற லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
ADDED : டிச 16, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: சாலையை கடக்க முயன்ற லாரி ஓட்டுநர், பைக் மோதி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 61; லாரி ஓட்டுநர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் மேம்பாலம் அருகே, நேற்று முன்தினம் இரவு லாரியை ஓரமாக நிறுத்தி, உணவகம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பைக், அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இஸ்மாயில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

