/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
லாரி ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : ஏப் 12, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:விழுப்புரம் மாவட்டம் பெரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல், 60; லாரி ஓட்டுநர். இவர், கடந்த 11ம் தேதி பாண்டிச்சேரியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனிக்கு இரும்பு லோடு ஏற்றி வந்தார்.
அன்று அதிகாலை 4:00 மணிக்கு, ஞானவேல் ஓட்டுநர் சீட்டிலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே உயிரிழந்ததாக விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, அவரது மனைவி செல்வி அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

