ADDED : நவ 19, 2024 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில், கடந்த 2006ல் பேருந்துக்காக காத்திருந்த பயணியர் மீது லாரி மோதியது. இதில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்த வழக்கு பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், லாரி ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் பரசுராமன் என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 29,500 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தரணிதரன் தீர்ப்பு அளித்தார்.
இதுகுறித்து நீதிபதி தரணிதரன் மற்றும் ஆர்.கே.பேட்டை எஸ்.ஐ., ராக்கிகுமாரியுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.