/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு
/
லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு
ADDED : நவ 29, 2024 09:27 PM
சோழவரம்:சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கணேஷ் நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சோழவரம் போலீசார் அங்கு சென்று, காயங்களுடன் இருந்த நபரரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரணையில், காயம் அடைந்தவர் கள்ளக்குறிச்சி, பெருவங்கூரை சேர்ந்த ராமகிருஷ்ணன், 33, என்பதும், டிரைவராக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.
மேலும், ஜனப்பச்சத்திரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு உறவினர் ஒருவரை பார்க்க வந்தபோது, பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல், ராமகிருஷ்ணனை வெட்டிவிட்டு தப்பியது தெரிந்தது.
முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்பதால், ராமகிருஷ்ணனிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு, கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

