ADDED : அக் 17, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: ஆந்திராவில் இருந்து எம்.சாண்ட் கடத்திய லாரியை திருத்தணி போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் லாரி மூலம் எம். சாண்ட் மற்றும் ஜல்லிகற்கள் திருத்தணி வழியாக சென்னைக்கு கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று திருத்தணி போலீசார், பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, போதிய ஆவணம் இல்லாமல் எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரியந்தது.
போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஓட்டுனர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
★★
