/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி உரிமையாளர்கள் திருவள்ளூரில் உண்ணாவிரதம்
/
லாரி உரிமையாளர்கள் திருவள்ளூரில் உண்ணாவிரதம்
ADDED : ஜன 30, 2024 07:51 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, டோல்கேட் அருகில், டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட லாரிகளை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செல்லும் சாலையில், வரிசையாக நிறுத்தி, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் பேசியதாவது:
ஓட்டுனர்களுக்கு பாதகமாக, மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; திருவள்ளூர் மாவட்டத்தில் உடனடியாக சவுடு மண் குவாரிகளை திறக்க வேண்டும். வாகனங்களுக்கு அதிகமாக விதிக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும். லாரிகளுக்கு, 'ஆன்லைன்' வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினர்.