/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டீசல் இன்றி சாலையில் நின்ற லாரி; போக்குவரத்து நெரிசலால் அவதி
/
டீசல் இன்றி சாலையில் நின்ற லாரி; போக்குவரத்து நெரிசலால் அவதி
டீசல் இன்றி சாலையில் நின்ற லாரி; போக்குவரத்து நெரிசலால் அவதி
டீசல் இன்றி சாலையில் நின்ற லாரி; போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : டிச 30, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: டீசல் இன்றி சாலையில் நின்ற லாரியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியே ஜனப்பன்சத்திரம் சென்ற கன்டெய்னர் லாரி, கன்னிகைப்பேர் கிராமத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு டீசல் இல்லாததால், சாலையிலேயே நின்றது.
இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு பக்கமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால், ஐந்து மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.