/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்த அழுத்த மின்சாரம் நுகர்வோர்கள் சரமாரி புகார்
/
குறைந்த அழுத்த மின்சாரம் நுகர்வோர்கள் சரமாரி புகார்
குறைந்த அழுத்த மின்சாரம் நுகர்வோர்கள் சரமாரி புகார்
குறைந்த அழுத்த மின்சாரம் நுகர்வோர்கள் சரமாரி புகார்
ADDED : ஏப் 05, 2025 10:18 PM
திருத்தணி:திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், தமிழக முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோர் உத்தரவின்படி, சிறப்பு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
இதில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, எரும்பி, கே.ஜி.கண்டிகை, பூனிமாங்காடு, பொதட்டூர்பேட்டை மற்றும் மாமண்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், திருத்தணி வருவாய் கோட்டத்தில் இருந்து, மின்நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், மின்கம்பங்கள் சேதம், குறைந்த அழுத்த மின் வினியோகம், மின்மாற்றிகள் பழுது, விவசாய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் உட்பட பல்வேறு புகார்களை தெரிவித்து, மனுக்களை அளித்தனர். இதை பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர், 'மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளிந்தார்.

