/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்தழுத்த மின் வினியோகம் அகூர் கிராமவாசிகள் கடும் அவதி
/
குறைந்தழுத்த மின் வினியோகம் அகூர் கிராமவாசிகள் கடும் அவதி
குறைந்தழுத்த மின் வினியோகம் அகூர் கிராமவாசிகள் கடும் அவதி
குறைந்தழுத்த மின் வினியோகம் அகூர் கிராமவாசிகள் கடும் அவதி
ADDED : ஏப் 23, 2025 02:17 AM
திருத்தணி, திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயமே பிரதான தொழில். இந்நிலையில், திருத்தணி மின்வாரிய அதிகாரிகள் அகூர் கிராமத்தில், 100 கே.வி., மின்மாற்றி அமைத்து, மின்வினியோகம் செய்து வருகின்றனர்.
அதேபோல், அகூர் விவசாயிகளின் மின்மோட்டார் இணைப்புக்கு, 100 கே.வி., மின்மாற்றி அமைத்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கு குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், கிராமத்தில் மின்விளக்கு சரியாக விளக்குகள் ஒளிர்வதில்லை. மேலும், குடிநீர் தொட்டிகளுக்கு மின் மோட்டார் வாயிலாக குடிநீர் ஏற்ற முடியவில்லை. அதேபோல், விவசாய மின் மோட்டார்களும் இயக்க முடியாததால் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அகூர் கிராமத்தில் கூடுதல் மின்மாற்றி அமைத்து, சீராக மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

