UPDATED : ஜூலை 08, 2026 06:18 PM
ADDED : ஜூலை 08, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
பள்ளிப்பட்டு:உரிய ஆவணம் இன்றி, எம் - சாண்ட் கடத்திய டிப்பர் லாரியை, கனிமவள துறை அதிகாரிகள், நேற்று பறிமுதல் செய்தனர்.
பள்ளிப்பட்டு பகுதியில், நேற்று கனிமவள துறை உதவி புவியியலாளர் சரவணன் தலைமையிலான சிறப்பு படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் சாலை வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை, சிறப்பு படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், எந்தவித ஆவணமும் இன்றி, எம் - சாண்ட் கடத்தி செல்வது தெரியவந்தது.
லாரியை கைப்பற்றிய அதிகாரிகள், எம் - சாண்ட் உடன், லாரியை பள்ளிப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். லாரியை ஓட்டி வந்த, திருவள்ளூரை அடுத்த ஆத்துாரை சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
