/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் அறுவடை பணியின்போது இயந்திரம் தீப்பற்றி எரிந்து நாசம்
/
நெல் அறுவடை பணியின்போது இயந்திரம் தீப்பற்றி எரிந்து நாசம்
நெல் அறுவடை பணியின்போது இயந்திரம் தீப்பற்றி எரிந்து நாசம்
நெல் அறுவடை பணியின்போது இயந்திரம் தீப்பற்றி எரிந்து நாசம்
ADDED : ஜன 10, 2026 06:13 AM

திருவள்ளூர்: வயல்வெளியில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட வாகனம், இயந்திர கோளாறால் தீப்பற்றி எரிந்து நாசமானது.
திருவள்ளூர் அடுத்த குப்பத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன்.
இவர், அருகில் உள்ள ராமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 15 ஏக்கர் பரப்பளவில் வயல்வெளியை குத்தகைக்கு எடுத்து, நெல் பயிரிட்டுள்ளார். தற்போது, அந்த வயலில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக, அவருக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திரம் மூலம், நேற்று நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அறுவடை இயந்திரம் தீப்பற்றி எரிந்தது.
இதனால், அவர் அலறியடித்து வாகனத்தில் இருந்து தப்பியோடினார். சிறிது நேரத்தில் இயந்திரம் மற்றும் அங்கிருந்த நெற்பயிர்கள், தீயில் கொளுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதன் காரணமாக, நெல் அறுவடை இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

