தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 20, 2024 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில், சென்னை சில்க்ஸ் எதிரே, 100 ஆண்டுகளுக்கு முன் வெங்கடாசலபதி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு எழுதி வைத்தார்.

அதன்பின், இந்த நிலத்தில் அரசு சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இவரது மனைவி ராஜம்மாள் தேவி என்ற பெயரில் பூங்கா செயல்பட்டு வந்தது. இந்த பூங்காவை, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்து, பாதுகாக்காமல் வணிக வளாகம் கட்டி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மா.கம்யூ., கட்சியினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வட்ட செயலர் எஸ்.கலையரசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவள்ளூர் நகர போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். அதன்பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us