/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் குளக்கரையில் மதுபிரியர்கள் அட்டகாசம்
/
கோவில் குளக்கரையில் மதுபிரியர்கள் அட்டகாசம்
ADDED : பிப் 16, 2025 03:38 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ளது ஜம்புகேஸ்வரர் கோவில். இந்த கோவிலின் எதிரே, காவேரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன.
இயற்கையான இந்த சூழலில் அமைந்துள்ள கோவில் அருகே, மதுபிரியர்கள் மது அருந்துகின்றனர். காலி மதுபாட்டிகள் மற்றும் இதர பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே வீசவிட்டு செல்கின்றனர்.
இதனால், குளக்கரை முழுதும் பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழிந்து கிடக்கிறது. காவல் நிலையம் எதிரேலேயே, மதுபிரியர்கள் கோவில் வளாகத்தில் குளக்கரையை நாசம் செய்து வருவதால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குளக்கரையில் மது அருந்துபவர்களால் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவிலைஒட்டிய குளக்கரையில் மதுஅருந்தும் நபர்களை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

