/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத கால்நடை குடிநீர் தொட்டி
/
பராமரிப்பு இல்லாத கால்நடை குடிநீர் தொட்டி
ADDED : ஏப் 11, 2025 02:25 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், சங்கீதகுப்பம் கிராமத்தில், 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தினர் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கீதகுப்பம் கிராமத்தின் தெற்கில் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், வீடு திரும்பும் வழியில், கிராமத்தின் எல்லையில், கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இந்த தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இந்த கால்நடை குடிநீர் தொட்டியை ஒட்டி, மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்றும் உள்ளது. இதனால், இதிலிருந்து கால்நடை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால், கால்நடைகள் பயனடைந்து வருகின்றன.
இந்நிலையில் நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாத இந்த கால்நடை குடிநீர் தொட்டியில், பாசி படர்ந்துள்ளது. குப்பை கழிவுகளும் மிதக்கின்றன. இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

