ADDED : மார் 17, 2025 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயப்பாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் புதுவள்ளூர் ஊராட்சிக்குட்பட்டது நயப்பாக்கம். இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர், பேருந்து வாயிலாக ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேவளூர்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் பயில்கின்றனர்.
இதில், மேவளூர்குப்பம் பள்ளி அருகே உள்ள நிழற்குடை பராமரிப்பில்லாமல் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், பள்ளிக்கு செல்லும் நயப்பாக்கம் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணியர் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.