/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.53 கோடியில் பராமரிப்பு பணி
/
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.53 கோடியில் பராமரிப்பு பணி
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.53 கோடியில் பராமரிப்பு பணி
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.53 கோடியில் பராமரிப்பு பணி
ADDED : ஜூலை 11, 2025 01:18 AM

திருவாலங்காடு:'திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2.53 கோடி ரூபாயில் நடந்து வரும் ஆலை இயந்திர பராமரிப்பு பணியை செப்., இறுதிக்குள் முடிக்க வேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
ஒவ்வொரு அரவை பருவத்திலும் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்கேபேட்டை உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு டிராக்டர் லாரி வாயிலாக வரவழைத்து அரவை செய்யப்படுகிறது.
நடப்பாண்டில், 2 லட்சம் டன் கரும்பு அரவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆலை இயந்திரங்களை பராமரிக்க, 2.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்து வருகிறது.
ஆலை இயந்திரங்களில் பழுது நீக்கும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில் நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் பணியை நேரில் பார்வையிட்டார்.
அப்போது இயந்திரங்கள், பாய்லர் செயல்பாடு, பணியாளர்கள் எண்ணிக்கை, குறித்து கேட்டறிந்தார். ஆலை பராமரிப்பு பணியை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்கவும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அக்டோபரில் ஆலையில் அரவையை துவங்க தயாராகும் படி அறிவுறுத்தினார்.
அப்போது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் மீனா உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.