தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெரும்பான்மை சமூகம் புறக்கணிப்பு திராவிட கட்சிகள் மீது ஆதங்கம்

 பெரும்பான்மை சமூகம் புறக்கணிப்பு திராவிட கட்சிகள் மீது ஆதங்கம்

 பெரும்பான்மை சமூகம் புறக்கணிப்பு திராவிட கட்சிகள் மீது ஆதங்கம்


ADDED : மார் 11, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் வரிசை எண்படி முதல் சட்டசபை தொகுதியாக கும்மிடிப்பூண்டி உள்ளது. அனைத்து சமூகத்தினரும் போட்டியிடக்கூடிய பொது தொகுதியாகவும் உள்ளது.

இந்த தொகுதியில், பெரும்பான்மை சமூகத்தினராக வன்னியர் உள்ளனர்.

ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும், அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், வன்னியராக இருப்பது இல்லை என்பது, அவர்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வருகிறது.

தி.மு.க.,வில் கடைசியாக, 1984ம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ., வேழவேந்தனுக்கும், அ.தி.மு.க.,வில் 1989ம் ஆண்டு கோபால் என்பவருக்கும், சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்பின், இரு திராவிட கட்சியிலும், வன்னியர் சமூகத்தினர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படவில்லை.

வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற ஆதங்கம் வெளிப்படையாக இல்லாமல், தேர்தல் நேரங்களில் இலை மறைவாக, காய் மறையவாக இருந்து வந்தது.

இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் அவர்களின் ஆதங்கம், தி.மு.க., கட்சியில் வெளிப்படையாக காட்டப்பட்டுள்ளது.

தி.மு.க.,வில் சில நாட்களுக்கு முன், வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து அவர்கள் புறப்படும் முன், கையில் பேனர் ஒன்றை வைத்திருந்தனர்.

அதில், 'தி.மு.க., சார்பில் கும்மிடிப்பூண்டி வேழவேந்தன் அவர்கள் தான் பெரும்பான்மை சமுதாயத்தின் முதல் மற்றும் கடைசி சட்டசபை உறுப்பினர்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அவர்களின் ஆதங்கத்தை தலைமை கண்டுகொள்கிறதோ இல்லையோ, ஆனால் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us