ADDED : ஏப் 05, 2026 10:08 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் முனிரத்தினம், 45. இவர் தற்போது தேர்தல் பறக்கும் படையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, கே.ஜி.கண்டிகை வழியாக திருத்தணி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கே.ஜி.கண்டிகை டாஸ்மாக் கடை அருகே, இருவர் போதையில் தகராறு செய்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட முனிரத்தினம், தன் பைக்கை நிறுத்தி தகராறில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த, எஸ்.அக்ஹாரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 45, அவருடன் தகராறு செய்த ரமேஷ் ஆகியோர் சேர்ந்து முனிரத்தினத்தை தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனர். தலை மறைவான ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
