/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெடிக் கல் 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
மெடிக் கல் 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்தவர் கைது
மெடிக் கல் 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்தவர் கைது
மெடிக் கல் 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.72 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : ஜன 10, 2025 02:03 AM

சென்னை,எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக கூறி, 71.63 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 52 ; தனியார் நிறுவன ஊழியர். அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்து உள்ளார்.
புகாரில், 2021ம் ஆண்டு சியோன் ஆன்லைன் சேவை நடத்தி வந்த நெல்லுாரைச் சேர்ந்த, வடலபள்ளி விஜயகுமார் என்பவர், புதுச்சேரி, மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரியில் தன் மகளுக்கு, எம்.பி.பி.எஸ்.,சீட் வாங்கி தருவதாக கூறினார்.
இதற்காக தன்னிடம் இருந்து, 71.63 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவ சீட்டு வாங்கி தராமலும், பணத்தைதிருப்பி தராமலும் ஏமாற்றி வருகிறார்.
எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்தனர்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், வடலபள்ளி விஜயகுமார், 39 என்பவர் ஜெயச்சந்திரன் உட்பட ஆந்திராவில் மேலும் சிலரிடமும் மருத்துவ கல்லுாரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விஜயகுமார், கோவா போன்ற இடங்களில் சென்று பொழுதை கழிப்பதும் அங்கே சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

