தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முதியவரிடம் பணம் பறித்தவர் கைது

 முதியவரிடம் பணம் பறித்தவர் கைது

 முதியவரிடம் பணம் பறித்தவர் கைது


ADDED : ஜன 14, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் முனுசாமி, 72; அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் காலை, திருத்தணி மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், முனுசாமியிடம், தன்னை போலீஸ் எனக் கூறி, 'உன் மீது புகார் வந்துள்ளது, விசாரிக்க வேண்டும்' என, இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்றார்.

சரஸ்வதி மில் அருகே வாகனத்தை நிறுத்திய மர்ம நபர், முதியவரிடம் இருந்த 3,000 ரூபாய், 7 கிராம் தங்க மோதிரத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலியைச் சேர்ந்த விஸ்வநாதன், 65, என்பவரை கைது செய்து, நகையை மட்டும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us