/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது
/
போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது
ADDED : நவ 26, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா எஸ்.ஐ., நாகபூஷ்ணம் மற்றும் போலீசார் 25ம் தேதி மாலை திருப்பாச்சூர் மற்றும் பட்டரைபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது பட்டரைபெரும்புதுார் டோல்கேட் அருகே நெடுஞ்சாலையில் ஒருவர் சாலையில் செல்வோரிடம் ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
இதையடுத்து எஸ்.ஐ., நாகபூஷ்ணம் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருத்தணி தாலுகா கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த குமார், 48 என்பது தெரிந்தது.
தாலுகா போலீசார் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

