/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
/
தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
ADDED : ஜன 31, 2024 11:38 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த 30 வயது பெண், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கணவர் வழக்கம்போல் பணிக்கும், மகன் பள்ளிக்கும் சென்றனர்.
இந்நிலையில், வங்கனுார் கிராமத்தைச் சேர்ந்த பாபு, 35, என்பவர், வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றதும், உள்ளே நுழைந்த பாபு, அப்பெண்ணின் வாயை மூடி மிரட்டி, கத்திமுனையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
காயமடைந்த அப்பெண், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கு பதிந்த திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாபுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.