ADDED : ஏப் 06, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் இ.என்.கண்டிகையைச் சேர்ந்தவர் வெங்கடேசுலு, 53; விவசாயி. இவர் நேற்று, வீட்டின் பின்புறம் உள்ள காலிமனையில் வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 35, என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் வைக்கோல் போர் போடக்கூடாது என, தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த லோகேஷ், வீட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து வந்து, வைக்கோல் மீது ஊற்றி தீ வைத்தார்.
வைக்கோல் போர் தீப்பிடித்து எரிய துவங்கியதும், அதிர்ச்சியடைந்த வெங்கடேசுலு வைக்கோல் மேலிருந்து கிழே குதித்தார். இதில், வெங்கடேசுலு படுகாயமடைந்தார். திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, லோகேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

