ADDED : மே 06, 2025 01:23 AM
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர் பரத்ராஜ், 27. இவர், நேற்று முன்தினம் இரவு ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு, மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர் ரயிலில் துாங்கிவிட்டார்.
கண்விழித்து எழுந்தபோது, ரயில் சென்ட்ரல் நிலையம் வந்திருந்தது. அப்போது, பரத்ராஜின் மொபைல் போன் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்தவர், சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.
போலீசார், மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ., எண்ணை வைத்து கண்காணித்தனர். இதில், பிராட்வேயில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அங்கு சென்று, மொபைல் போன் வைத்திருந்த நபரை பிடித்தனர். விசாரணையில், அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்த சஞ்சய், 26, என்பதும், ரயிலில் துாங்கிக் கொண்டிருந்த பரத்ராஜின் மொபைல்போனை திருடியதும் தெரியவந்தது, இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
