ADDED : மார் 22, 2026 03:56 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: பழைய இரும்பு கடையில், 400 ரூபாய் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் தங்க குமாரைய்யா, 64. இவர், திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பேப்பர் வாங்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை பழைய செய்தித்தாள்களை அடுக்கும் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, இவரது கடைக்கு வந்த சிவம் நகரைச் சேர்ந்த கிஷோர், 22, என்பவர், கல்லா பெட்டியில் இருந்த 400 ரூபாயை திருடிச் சென்றார்.
இதுகுறித்து, தங்க குமாரைய்யா அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், கிஷோரை கைது செய்தனர்.
