/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : டிச 21, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவரசன், 27. இவர், நேற்று மது போதையில், திருத்தணி காந்தி ரோடு பகுதியில், கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி, கொலை செய்து விடுவேன் என, மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, திருத்தணி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார், மது போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட அறிவரசனை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

